முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இராமனுஜம் பதவி ஏற்றார்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே 21 - தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.யாக ராமானுஜம் பதவி ஏற்று கொண்டார். விருப்பு, வெறுப்பற்ற முறையில் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.தமிழக அரசு நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தலைவராக இருந்த கூடுதல் டி.ஜி.பி. ராமானுஜம் டி.ஜி.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு உளவு பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

மோகன்தாஸ், அலெக்ஸ்டாண்டருக்கு பிறகு 3-வது உளவு பிரிவு டி.ஜி.பி. ராமானுஜம் ஆவார். உளவு பிரிவு டி.ஜி.பி.யாக ராமானுஜம் மாற்றப்பட்ட சிலமணி நேரத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் இராமானுஜம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது டி.ஜி.பி.யாக உள்ள போலோநாத் தீயணைப்பு துறை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் நேற்று மதியம் 1.30 மணி அளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து கைகுலுக்கி போலோநாத் விடைபெற்றார். அப்பொழுது உடன் உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன் கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமானுஜம், 

பாரம்பரியமும், வளமான எதிர்காலமும் கொண்ட தமிழக காவல் துறையின் தலைமை பொறுப்பை மிக்க பணிவோடு இன்று (நேற்று) ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டதற்காக பெருமைப்படுகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை வழங்கியதற்காக தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் காவல் துறையில் பல்வேறு நிலைகளிலும் திறமை மிக்க அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றார்கள். அவர்கள் அரசு மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முதல் கடமையாக இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை, அவரும் கவனத்தில் எடுத்துக்கொள்வேண்டும். அதனால் நமது பொறுப்பும் இன்னும் அதிகமாகி இருக்கின்றது. அரசின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும். காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் தனிப்பட்ட முறையிலும், கடமையாற்றுவதிலும் அப்பழுக்கற்றவர்களாக நடந்து கொள்ளவேண்டும்.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணியில், பொதுமக்களும் ஊடகங்களும் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்