முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூ.,க்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடும்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜன. 17 - நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்தி ய அணி சிறப்பாக விளையாடி தொட

ரைக் கைப்பற்றும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை நடக்க இருக்கிறது. 

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது  _ தென் ஆப்பிரிக்க பயணம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது. டெஸ்ட் மற்றும் 

ஒரு நாள் தொடரை இழந்தது. 

கடுமையான தொடரில் விளையாடிய பிறகு இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது. 

ஆனால் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஸ்டெயின், மார்கெல் போன்ற சிறந்த பௌலர்கள் நியூசிலாந்து அணியில் இல்லை. தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடுகையில் நியூசிலாந்து அணி வலுவானது இல்லை. 

ரஞ்சி டிராபியில் பெங்கால் இறுதிப் போட்டிக்கு நுழைந்தால் கேப்டன் லட்சுமி ரத்தன்சுக்லாவின் சிறப்பான ஆட்டம் தான் காரணமாக இருக்கும். 

இதனால் அவர் இந்திய அணிக்கு மீண்டு

ம் திரும்ப இயலாது என்று கருத வேண்டாம். அசோக் திண்டாவும் தனது பந்து வீச்சு திறனை வெளிப்படுத்தினால் மீண்டும் அணிக்கு நுழைய முடியும். இவ்வாறு கங்குலி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்