முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது வழங்கப்படும்- ஜெயலலிதா பேட்டி

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 25 - மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது வழங்கப்படும் என்று கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி:​ ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, உங்களையும் கொலை செய்ய முயன்று தப்பித்ததாக பத்மநாபன் கூறியதாக இன்று செய்தி வெளியாகி இருக்கிறதே? பதில்:​ 1991​ல் இது நடந்தது. நான் தப்பித்து விட்டேன் உங்கள் முன் இருக்கிறேன். இது புதிய செய்தி அல்ல.  கேள்வி:​ மதுரை என்ஜினீயர் தீவிரவாத செயலில் கைதானது பற்றி மத்திய அரசு உங்களிடம் ஏதாவது கருத்து பரிமாற்றம் செய்துள்ளதா?
பதில்:​ இல்லை.
கேள்வி:​ திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே?
பதில்:​ ராஜீவ்காந்தி கொலையில் தி.மு.க.வுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு.
கேள்வி:​ பழைய சட்டமன்றத்தில் இருந்த செம்மொழி ஆய்வு நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறதே?
பதில்:​ முடிவு எடுக்கவில்லை.
கேள்வி:​ புதிய சட்டசபை கட்டிடம் எதற்கு பயன்படுத்தப்படும் என்பது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தீர்களே?
பதில்:​ முடிவு எடுக்கும்போது தெரிய வரும்.
கேள்வி:​ மத்திய அரசுக்கு தேவைப்பட்டால் அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று முன்பு நீnullங்கள் கூறியிருந்தீர்களே?
பதில்:​ நீnullங்கள் ஏன் அதை கேட்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டும்.
கேள்வி:​ மாணவர்களுக்கு லேப்​டாப் எப்போது வழங்கப்படும்?
பதில்:​ கவர்னர் உரை வரும் வரை காத்திருங்கள். தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி இலாகா உருவாக்கி அமைச்சரை நியமித்து இருக்கிறேன். அந்த இலாகா மூலம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:​ சோனியா உங்களை தேnullநீர் விருந்துக்கு அழைத்தாரா?
 பதில்:​ நாங்கள் வெற்றி பெற்றதற்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். தேnullநீர் விருந்துக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன்.
கேள்வி:​ மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படுமா?
பதில்:​ அனைத்து திட்டங்களையும் நிறைவேற்று வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கேள்வி:​ டாஸ்மாக் கொள்கையில் மாற்றம் உண்டா?
பதில்:​ பொதுவாக எந்த மாற்றமும் இல்லை. கவர்னர் உரையில் இதுபற்றி தெரிவிக்கப்படும்.
கேள்வி:​ உள்ளாட்சி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?
பதில்:​ அதற்கு அவசியம் இல்லை. உரிய நேரத்தில் நடத்தப்படும். இவ்வாறு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்