ஆஸ்திரேலியாவில் விசா மோசடி: இந்திய தம்பதி கைது

Image Unavailable

 

மெல்போர்ன், பிப்.15 - ஆஸ்திரேலிய விசாவுக்காக வாடிக்கையாளர்களுக்கு போலியாக அந்நாட்டு பெண்களை திருமணம் செய்து வைத்து, விசா மோசடியில் ஈடுபடிடதாக இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.இந்தியாவில் மும்பை நகரை சேர்ந்தவர் சேத்தன் மோகன்லால் மஷ்ரு. இவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோருக்கு விசா வாங்கிகொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி திவ்யா கிருஷ்ணே கெளடா, ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் வரை 30 ஜோடிகளுக்கு சட்ட விரோதமாக திருமணம் செய்து வைத்து விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதறிகாக ஒவ்வொரு திருமணத்துக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 வட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இது தொடர்பாக இவர்கள் அனுப்பிய கோரியர் தபால் ஒன்று இதை அம்பலப்படுத்தியது. பின்னர் இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து தப்பி வந்து6மாதங்கள் இந்தியாவில் தலைமறைவாக இருந்தனர்.அதைத்தொடர்ந்து அஸ்திரேலியா சென்ற இவர்களை குயின்ஸ்லாந்து மாகாணத் தலைநகரம் பிரிஸ்பனில் திங்கள் கிழமை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி பிரிஸ்பன் குற்றவியல் நடுவனி நீதிமன்றத்தில் மோகன் லால் மஷ்ருவும், திவ்யா கிருஷ்ணே கெளடாவும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பதியர் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மோகன்லால் மஷ்ருமீது 31 விசா மோசடிப் புகார்களும், திவ்யா மீது 17 விசா மோசடிப் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ