முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள்: இலங்கை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், பிப். 19 - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 1_ 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இலங்கை அணி தரப்பில், பெரேரா மற்றும் செனநாயகே ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்னைச் சேர்த்ததால் அந்த அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது. 

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மிர்பூரில் நேற்று நடந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 40 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கவுசல் பெரோரா 20, தில்ஷான் 3, சங்கக்கரா 8, சண்டிமால் 13, பிரியரஞ்சன் 6, மேத்யூஸ் 3, குலசேகரா 0, விதாங்கே 7 ரன்களில்ஆட்டம் இழந்தனர். 

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 67 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் காலியானது. கடைசி கட்டத்தில் பெரேரா, செனநாயகே ஜோடி அதிரடியாக ஆடியது. 

பெரேரா 57 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்னும், செனநாயகே 30 ரன்னும் விளாசியதால் அந்தஅணி 180 ரன் என்ற கௌரவ நிலையை அடைந்தது.

வங்கதேச அணி சார்பில் முன்னணிவீரர்களான ஹோசைன், ஷாகிப் அல் ஹசன், அராபத் சன்னி தலா 2 , அமின், காஸி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட் செய்தது. அந்த அணி 39.2 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

வங்கதேச அணி சார்பில், ரகுமான் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். தவிர, மோனிமுல் ஹாக் 44, முஜிபுர் ரகிம் 27 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கை ரன்களில் வெளியேறினர். 

வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. அதன் பின்னர் சீட்டுக் கட்டு போல விக்கெட்டுகள் சரிந்தன. 

இலங்கை அணி சார்பில் மேத்யூஸ் 3, செனநாயகே, 2, பெரேரா, மலிங்கா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது பெரேராவிற்கு வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்