முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை ஜூ.கிரிக்கெட்: தெ.ஆப்பிரிக்கா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், மார்ச் 3  - ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதன் முறையாக கோப்பையை வென்றது. 

உலகக் கோப்பை போட்டிகளில் திறமையான தென் ஆப்பிரிக்காவின் தேசிய அணியினால் பெற முடியாத சாம்பியன் பட்டத்தை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி வென்றுள்ளது. 

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா ஒரு ராசியில்லாத அணி என்ற மூட நம்பிக்கையும் தற்போது தகர்ந்துள்ளது. 

துபாயில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. 

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 44.3 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா வேகப் பந்து வீச்சாளர் கார்பின் போஸ்ச் மற்றும் ஜஸ்டின் டில் ஆகியோர் அற்புதமாக பந்து வீசினர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அமத் பட் 37 ரன்கள் எடுத்தார். 

சுலப இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியும் விரைவில், வெற்றி இலக்கை எட்டவில்லை. அந்த அணி 42.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தே 134 ரன்கள் எடுத்தது. 

எய்டன் மார்க்ரம் 66 ரன்களும், கிரேக் ஒல்டுபீல்டு 40 ரன்களும் எடுத்திருந்தனர். ஆட்டநாயகன் விருது கார்பின் போஸ்ச்சுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் கைப்பற்றினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்