முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி பற்றி செய்தி வெளியிட தனியார் டி.வி.க்கு தடை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.19 - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி குறித்து செய்தி வெளியிட தனியார் தொலைக்காட்சிக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:_

ஐ.பி.எல்" கிரிக்கெட் சூதாட்ட மோசடி குறித்து நடைபெறும் விசாரணையில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் "ஜி நெட்வொர்க்'' நிறுவனத்தின் டி.வி.சேனல் என்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டு வருகிறது. மோசடி குறித்து நடைபெறும் விசாரணையில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் "ஜி நெட்வொர்க்'' நிறுவனத்தின் டி.வி.சேனல் என்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டு வருகிறது.

என்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிடு வதற்கு அந்த டி.வி.சேனலுக்கு தடைவிதிக்க வேண்டும். ஏற்கனவே அவதூறு செய்தி வெளியிட்டதற்காக அந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் எனக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தமிழ்வாணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு எதிரான செய்தி வெளியிட தனியார் டி.வி. சேனலுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் தாக்கல் செய்யுமாறு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்