முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.31 -​முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவையில் இரண்டாம்
கட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் கொள்ளைகள் பற்றிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:  முதல்​ அமைச்சர் ஜெயலலிதா கடந்த 16​ந்தேதி பதவி ஏற்றார். அன்றைய தினமே 20 கிலோ இலவச அரிசி, பெண்கள் திருமணத்துக்கு அரை பவுன் தங்கம் இலவசம், அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதமாக அதிகரிப்பு, மீன வர்களுக்கு மானிய தொகை அதிகரிப்பு உள்பட 7 நலத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து 17, 18 ஆகிய தேதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 22​ந்தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் ஜூன் 6​ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவது, சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

 நேற்று காலை 9.30 மணிக்கு அமைச்சரவையின் 2​வது கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. முதல்​அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கவர்னர் உரையில் இடம் பெற வேண்டிய அரசின் கொள்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி.யை கொண்டு வருவது, உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை ஒரே இடத்தில் நடத்துவதா அல்லது பல மையங்களில் நடத்துவதா என்பது பற்றியும் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்