முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்பு வரும் வரை சீனிவாசன் பதவி விலகமாட்டார்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மார்ச் 27 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுபிரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடர்பான தகவலைக் கூறி கருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சுப்ரிம் கோர்ட்டில் வந்தபோது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலகிடவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். பதவி விலகாவிட்டால் தாங்களே உத்தரவிட வேண்டி இருக்கும் என்ரு தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் வருகிறது. அதற்குள் என்.சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

சுப்ரிம் கோர்ட்டின் இந்த கடுமையான உத்தரவு காரணமாக என்.சீனிவாசன் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவி விலக மாட்டார் என்று கூறப்படுகிறது. சுப்ரிம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வரும் வரை அவர் காத்திருப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சுழர்பந்து வீரரும், கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவருமான ஷிவ்லால் யாதவ் கூறியதாவது: சுப்ரிம் கோர்ட்டில் இறுதி முடிவுக்காக கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. அதன் பிறகே எதுவும் முடிவு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

என்.சீனிவாசன் பதவி விலகுனால் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷிவ்லால் யாதவ் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்