முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் செல்போனில் பேச தடை

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் 28 - குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதம் முதல், பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு 9 மணிக்கு மேல் தங்களது செல்போன்களை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்