வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா மீது அவதூறு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

டாக்கா, ஏப்.1 - எனது கணவரே வங்கதேசத்தின் முதல் அதிபர் என்று சர்ச்சைக்குறிய வகையில் வரலாற்றைத் திரித்து கருத்துக் கூறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியா மீது அவதூறு வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்கா பெருநகர் நீதிமன்றத்தில் அவாமி லீக் கட்சியின் ஆதரவு அமைப்பான ஜனனேத்ரி பரிஷத், தலைவர் ஏ.பி.சித்திக் தாக்கல் செய்துள்ள மனுவில், வரலாற்றை திரித்து கலீதா ஜியா கூறியுள்ள கருத்து, வங்கதேசத்தை உருவாக்கிய பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நர்பெயரை சர்வதேச சமூதாயத்தின் முன்னாள் களங்க படுத்துவதாக உள்ளது.

எனவே, கலீதா ஜியாவுக்கு கைது வாரண்ட பிறப்பிக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். இந்த  மாஜிஸ்திரேட் ஷம்சுல் அரேஃபின், விசாரணைக்கு எற்றுக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து கலீதா ஜியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி சுதந்திரதினத்தன்று தனது கட்சி சார்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, சுதந்திரத்துக்காக போராடிய தனது கணவரே நாட்டின் முதல் அதிபர் என்று கலீதா ஜியா கருத்து தெரிவித்திருந்தார்

வங்கதேசத்தில் 1975-ஆம் ஆண்டு 15 தேதி முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பிறகு, வங்கதேச தேசிய வாத கட்சி நிறுவனர் ஜியாவுர் ரஹ்மான அதிபரானார். பின்னர், 1981-ல் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது எதிர்ப் பாளர்களால் கொல்லப்பட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: