முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெற்றி

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மொனாகோ, ஏப்.22 - மாணடேகார்லோ மாஸ்டரஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெடரரை வீழ்த்தி வாவரிங்கா வெற்றி பெற்றார். அனல் பறக்க நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை பெடரர் கைபற்றினாலும், அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சியளித்தார் வாவ்ரிங்கா. இறுதியில் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

2006-2008வரை மூன்று முறை மாண்டேகார்லோவில் இறுதிப்போட்டியில் நடாலிடம் தோல்வி கண்டிருந்த பெடரர் இந்த தடவை முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்தார். அவரது கணவை சக நாட்டவரான வாவ்ரிங்காவே தகர்த்துவிட்டார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள வாவரிங்காவுக்கு பெடரருடன் இதுவரை மோதியுள்ள 15 போட்டிகளில் பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இது.

போ்ட்டியில் தோல்வியடைந்த பெடரர் கூறுகையில், வாவ்ரிங்காவின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு முதல் கிராண்ட் ஸ்டாம் பட்டத்தை வென்ற பின்னர் அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது. இந்த அழகான ஆடுகளத்தில் டென்னிஸ் கொண்டாட்டமாக அவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. நான் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக டென்னிஸ் விளையாடி வருகிறேன். இப்போது சற்று ஓய்வாக உள்ளது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்