முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயிலில் உடலுக்குள் மறைத்து துப்பாக்கி கடத்தியவர் கைது

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஏப்.26 -அமெரிக்காவில் உள்ள டென்னீஸ்சி நகரை சேர்ந்தவள் டல்லாஸ் ஆர்செர். இவள் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஆயுதங்களை கடத்தி விற்பனை செய்து வந்தாள்.

இந்த நிலையில் திடீரென கைதாகி கிங்ஸ் போர்ட் சிறையில் அடைக்கப்பட்டாள். அவள் மீது சந்தேகம் அடைந்து போலீசார் சோதனை செய்தனர்.  ஆயுதம் எதுவும் சிக்கவில்லை. இருந்தும் அவளை போலீசார் விடவில்லை. பெண் போலீசாரை அனுப்பி பாத்ரூமில் வைத்து ஆடை முழுவதும் களைத்து சோதனையிட வைத்தனர். அப்போது அவள் தன் பெண் உறுப்புக்குள்  துப்பாக்கியை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த துப்பாக்கி 4 இஞ்ச் அளவுடையது. 22 காலிபர் மினி ரிவால்வர் ரகத்தை சேர்ந்தது. அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். சமீபத்தில் கார் விற்பனை ஷோரூமில் நடந்த கொள்ளையின் போது இது திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்