முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 15-ந்தேதி முதல் மாணவர்களுக்கு மடிக்கணினி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.4 - 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு செப்.15-ந்தேதி மடிக்கணினி வழங்கப்படும் என்று கவர்னர் உரையில் சுர்ஜித்சிங் பர்னாலா அறிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரை வருமாறு:-

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இரண்டாம் நிலை நகரங்களில் தொலைத் தொடர்பு பூங்காக்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி இத்துறையின் வளர்ச்சியை இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப் பகுதிகளில் உள்ள வணிக வெளிப்பணி மையங்கள்  வலுவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பரவலாக்கப்படும். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15-ம் நாள் முதல் தொடங்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து ப்ளஸ் 1, மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 2011-2012-ம் ஆண்டில் 9.12 இலட்சம் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்