முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் முறைக்கேடு: 3 இந்தியர்கள் குற்றவாளிகள்

வெள்ளிக்கிழமை, 2 மே 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், மே 3 - அமெரிக்காவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுமார் ரூ.90.39 கோடி அளவுக்கு முறைக்கேடு செய்ததாக 3 இந்தியர்களை குற்றவாளிகள் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் பிரிவு உதவி அட்டர்னி ஜெனரல் டேவிட் ஓ நெயில் கூறியதாவது: மருத்துவ நிருணர்களான ஷாசாத் மிஸ்ரா, ஜிகார் படேல், ஸ்ரீனிவாச ரெட்டி ஆகிய மூவரும், கடந்த 2008-ஆம் ஆண்டு மூதல் 2011-ஆம் ஆண்டுவரை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பல முறைக்கேடுகளை செய்துள்ளனர். இதில் ஷாசாத் மிஸ்ரா, ஜிகார் படேல் ஆகிய இருவரும் தலா இரண்டு முறை மருத்துவ சிகிச்சை அளித்ததாக் போலி ஆவணங்களைக் கொடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் பெறாத ஸ்ரீனிவாச ரெட்டி, நோயாளிகளுக்கு தூக்க மருந்துகளைக் கொடுத்து, மருத்துவ சிகிச்சை அளித்ததாக போலி ஆவணம் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டதும் விசாரணையின் போது தெரியவந்ததாக டேவிட் ஓ நெயில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்