முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட காலம் வாழ்வது எப்படி? 116 வயது மூதாட்டியின் பதில்

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2014      உலகம்
Image Unavailable

 

லிமா, மே 5 - நீண்ட காலம் உயிர் வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ பதில் கூறுகிறார் பெருநாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் 116 வயதாகும் உலகிலேயே அதிக வயதான ஃபிலோமினா டைபே மென்டோஸா என்ற மூதாட்டி

உணவு கட்டுபாட்டுடன் இருப்பது தான, நீண்ட காலம் நான் உயிர்வாழும் ரகசியமாகும். நான் எப்போதும் உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறி ஆட்டுப்பால் மற்றும் அவரை ஆகியவற்றை மட்டுமே உட்கொள்வேன். நான் உணவுக்காக பயன்படுத்தும் காய்கறிகள் அனைத்தும் எனது தோட்டத்தில் இருந்தே பெறப்பட்டவையாகும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை நான் அருந்தியதே இல்லை என்கிறார் அவர்.

இதற்கு முன்னதாக உலகிலேயே அதிக வயதானவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜப்பானின் மிஸாவ் ஓகாவாவைவிட 3 மாதங்களே இவர் இளையவராவார். ஹுவான்கவெலிகா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த டைபே மென்டோஸா, அந்த கிராமத்தை விட்டு வெளியே சென்றதே இல்லை. கடந்த 1897-ஆம் ஆண்டு டிஸம்பர் 20-ஆம் தேதி டைபே பிறந்துள்ளதாக அவரிடம் உள்ள அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்று பெருநாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்