முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையை மீண்டும் சிதைத்தது பஞ்சாப்

வியாழக்கிழமை, 8 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக், மே.9 - ஐபிஎல் 7வது சீசனில் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல்_ மில்லர் ஜோடி வாணவேடிக்கை நிகழ்த்தியது. 20 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 231 ரன் குவித்து அசத்தியது. 

இந்த முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை மேக்ஸ்வெல் தவற விட்டார். 38 பந்தில் 90 ரன் குவித்து அசத்தினார். அடுத்தபடியாக மில்லர் 47, பெய்லி 40 ரன் விளாசினர். சேவாக் 30, மன்தீப்சிங் 3 ரன்னில் வெளியேறினர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட சென்னை இந்த இலங்கை விரட்டலாம் என ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. 

ஆனால் அதிரடி தொடக்க வீரர் ஸ்மித் அப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று சொல்லும் வகையில் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியை தொடங்கி வைத்தார். இது கடைசி வரை அப்படியே தொடர்ந்தது. சென்னையால் 6 விக்கெட்டை இழந்து 187 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 44 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. 

சென்னை தரப்பில் மெக்குல்லம் 33, ரெய்னா 35, ஜடேஜா 17, டூபிளெசிஸ் 52, தோனி 23 ரன் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஜான்சன் 2, மேக்ஸ்வெல், சந்தீப்சர்மா, ரிஷிதவான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். மேக்ஸ்வெல் மேன் ஆப் தி மேட்ச் வீரர் விருதை தட்டி சென்றார். 

வழக்கம் போல் மேக்சி டேவி பேட்டிங்கில் அசத்தி விட்டனர். எனக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. இதனால் நானும் விளாச முடிந்தது. பந்து வீச்சாளர்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டனர். பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. 

தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், நான் அடித்து நொறுக்குவது மட்டுமின்றி மற்ற பேட்ஸ்மேன்களும் விளாச மேக்ஸ்வெல் உதவுகிறார். முதல் 10 ஓவரில் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அடுத்த 10 ஓவர் ஓவராக போய் விட்டது. மேக்ஸ்வெல் மிகவும் வித்தியாசமாக அதாவது டெண்டுல்கர், சேவாக் போல் விளாசுகிறார். தொடக்கத்தில் ஸ்மித், நடுவரிசையில் ஜடேஜா அவுட்டானது ஆட்டத்தை மாற்றி விட்டது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்