முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 ஏழை எளிய பெண்களுக்கு 4 கிராம் தங்கம் - உதவி தொகை- ஜெயலலிதா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 7 - 14 ஏழை எளிய பெண்களுக்கு, 4 கிராம் தங்கம், உதவி தொகையினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவாகவும், செம்மையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பதவியேற்ற அன்றே ஏழு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறையின் மூலம் தற்போது செயல்படுத்தப்படும், ஐந்து திருணத் திட்டங்களின் கீழ் பெண்களுக்கு திருமண நிதியுதவி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை 25 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி தமிழக முதல்வர் ஜெயலலிதா 16.5.11 அன்று ஆணையிட்டார்.
திருமண வயதை அடைந்த பெண்களை பெற்ற பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கும், அத்திருமணத்திற்கு தங்கம் வாங்கவும், போதிய நிதி வசதியின்றி சிரமப்படுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, ஏழை பெற்றோர்கள் மனம் குளிரும் வண்ணம் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை நேந்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்து, ஏழு ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய, நான்கு கிராம் (22 கேரட்) தங்க நாணயம் வழங்கி வாழ்த்தினார்.
தமிழக முதல்வர் ஜெயலிலதா, இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற ஏழு பெண்களுக்கு, திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கி வாழ்த்தினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து திருமண நிதியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கமும் பெற்று கொண்ட பெண்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!