முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் அணிக்கு 5-வது வெற்றி: பெங்களூருக்கு சிக்கல்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மே 21 - ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றேயாக வேண்டிய நிலையில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அபார பேட்டிங்கினால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துது. முதல் 10 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணியின் சிக்கனமான பந்து வீச்சின் காரணமாக 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களையே எடுத்திருந்த பெங்களூரு கடைசி 10 ஓவர்களில் 112 ரன்களை விளாசியது. வீராட் கோலி அபாரமாக பேட் செய்து 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். யுவ்ராஜ் சிங் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 பந்துகளில் 25 ரன்களையும் டிவிலியர்ஸ் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிகருடன் 29 ரன்களையும் எடுத்து உதவி புரிந்தனர்.

துவக்கத்தில் புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசினார். பார்த்தீவ் படேல் (4) அபார பந்துக்கு எல்.பி. ஆனார். கெய்லின் ஆட்டமும் எடுபடவில்லை அவர் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரசூல் கேட்ச் பிடிக்க ஷர்மாவிடம் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு யுவ்ராஜ், கோலி இணைந்து 7 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்தனர். கோலியும், டிவிலியர்ஸும் இணைந்து 5 ஓவர்களில் 63 ரன்களை விளாசினர். பெங்களூரு அணி 160 ரன்கள் எடுக்க உதவினர். ஆனால் புவனேஷ், டேல் ஸ்டெய்ன் சிக்கனமாக வீச, முதல் போட்டியில் ஆடும் ஜம்மு காஷ்மீர் விரர் பர்வேஸ் ரசூல் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் 2 பந்துகள் மீதமிருக்கையில் 161/3 என்று ஸ்கோர் செய்து அபார வெற்றியை ஈட்டியது. .5 ஓவர்களில் ஐதராபாத் அணி 51 ரன்களை எட்டியது. 11வது ஓவர் இறுக்கத்தை தளர்த்தினார் வார்னர், முரளி வீச மேலேறி வந்து லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார். பிறகு தவானும் மேலேறி வந்து இன்சைடு அவுட் சென்று கவர் திசையில் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது. தவான் 12-வது ஓவரில் 37 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து அடுத்த பந்திலேயே பெவிலியன் திரும்பினார்.

13வது ஓவர் முடிவில் ஸ்கோர் 101/1 என்று இருந்தது. நமன் ஓஜா களமிறங்கி உடனேயே சாஹல் பந்தை சிக்சருக்கு விளாசினார். 17வது ஓவரில் 46 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர் சகிதம் 59 ரன்கள் விளாசிய வார்னர் வருண் ஆரோன் புல்டாஸில் யுவ்ராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு ஓஜா இன்னொரு சிக்சரை விளாசி 24 ரன்கள் எடுத்து ஆரோன் பந்தில் மீண்டும் யுவ்ராஜ் கேட்ச் பிடிக்க வெளியேறினார். இப்போதும் சன் ரைசர்ஸுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ஆரோன் பின்ச் 11 ரன்களையும் டேரன் சாமி 10 ரன்களையும் எடுக்க சன் ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் 10 ஓவர்களில் 48 ரன்களையே பெங்களூரு எடுத்ததால் தோல்வி ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்