முக்கிய செய்திகள்

அமைச்சர் மரியம் பிச்சை மறைவு சட்டபேரவையில் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 7 - அமைச்சர் மரியம் பிச்சை மறைவிற்கு, சட்டபேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு சட்டபேரவை கூடியது. சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறலை படித்து, சபை நிகழ்ச்சியை துவக்கினார். முதலாவதாக மறைந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. பின்னர் மறைந்த அமைச்சர் மரியம்பிச்சைக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.  அப்போது சபாநாயகர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:- திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு பகுதியிலிருந்து 14-வது தமிழக சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்ற என்.மரியம் பிச்சை 23.5.11 அன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மறைவுற்ற செய்தி அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் கொள்கிறது. மரியம் பிச்சை சதாரன தொண்டனாக இருந்து, பல்வேறு கோரிக்கைகளை வகித்தவர். கட்சி தலைமையின் மீது அன்பும், விசுவாசமும் கொண்டு, ஆரம்ப காலம் முதல் கட்சி பணிகளில் முழுமையாக தன்னை ஈடுப்படுத்தி கொண்டு, திறம்பட பணியாற்றியுள்ளார்.
பொது வாழ்வில் அடுக்கமுடன் சீரியமுறையில், பணியாற்றிய இவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக மூன்று முறை பணியாற்றி அனைவரிடத்திலும் நட்பு உறவோடு பழகி, அனைத்து தரிப்பினரின் பாராட்டையும் பெற்றவர். ஆற்றல் படைத்த துடிப்புமிக்க செயல் வீரராக பணியாற்றி வந்த இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மறைவால் அவரை இழந்து வருந்தும் அவரின் குடும்பத்திற்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதபாத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் 2 மணி துளிகள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: