முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் செல்ல 29-ம் தேதிக்கு முன்பு யாருக்கும் அனுமதி இல்லை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

துல்முல்லா,ஜூன்.10 - வரும் 29-ம் தேதிக்கு முன்பு அமர்நாத் யாத்திரை செல்ல யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர்அப்துல்லா அறிவித்துள்ளார். இமயமலையில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு பனிலிங்கத்தை வழிபட வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜம்மு வழியாக யாத்திரை சென்று வருவார்கள். பக்தர்கள் யாத்திரை செல்லும் வழியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் மூன்றடக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தாண்டு இப்போதே யாத்திரை செல்ல பக்தர்கள் தயாராகிவிட்டனர். இந்தநிலையில் வருகின்ற 29-ம் தேதிக்கு முன்பு அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படாது என்று முதல்வர் உமர் அப்துல்லா நேற்று துல்முல்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். வருகின்ற 29-ம் தேதி யாத்திரை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேதிக்கு முன்பு யாரும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படாது என்று அவர் கூறினார்.  

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுப்போம் என்றும் உமர் கூறினார். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் ஹீர் பவானி கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அமர்நாத் கோயில் யாத்திரையை  வரும் 15--ம் தேதி தொடங்கும் திட்டத்தை விஸ்வ இந்து பரிஷ் அறிவித்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு உமர் அப்துல்லா மேற்கண்டவாறு பதில் அளித்தார். அமர்நாத் யாத்திரை வரும் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி முடிவடைகிறது. இந்தாண்டு சுமார் 5 லட்சம் மக்கள் யாத்திரை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்