அரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி - ஜெயலலிதா கண்டனம்

jayalalitha3

 

சென்னை, பிப்.26 - மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரிய நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என்ற வரிசையில் தற்போது அரசு ஊழியர்களையும் போராடும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது மைனாரிட்டி தி.மு.க. அரசு. மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் அளித்துவிட்டதாக மைனாரிட்டி தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

இதே போன்று, ஒப்பந்த முறை அறவே nullநீக்கப்படும் என்ற மைனாரிட்டி தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியதாக மைனாரிட்டி தி.மு.க. அரசு அறிவித்தாலும், மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இதுவரை கண்டிராத அளவுக்கு இருக்கிறது.  இந்தச் சூழ்நிலையில், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல்; காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல்; தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியக்கட்டு மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல்; சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்nullதியம் ஆகியவற்றை அடியோடு nullக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர். 

நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், கோரிக்கை மனுவினை அளிக்க வந்த அரசு ஊழியர்களை காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெரினா கடற்கரையில், மனைவி, துணைவியுடன் மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்குக் காரணமான கருணாநிதிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தினுடைய வலி தெரிவதற்கு வாய்ப்பில்லை. 1989​ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்  என்று அறிவித்துவிட்டு, அதில் பல முரண்பாடுகளை உருவாக்கியவர் தான் கருணாநிதி.  

பின்னர் 1991​ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 விழுக்காடு தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12,000 இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; 2000​க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்த வரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்  உயர் பதவிகள் கிடைக்கவும் வழிவகை செய்தேன் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை  நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மைனாரிட்டி தி.மு.க. அரசு புறக்கணிக்கும் பட்சத்தில், விரைவில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கவிருக்கும் அ.தி.மு.க. அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர  கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற உறுதியினை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ