எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், பிரமதர் மோடி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சிவகங்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதி மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


