எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குழுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஜிஜிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வை செய்கின்றனர். இதனிடையே, சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஜிஜிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் நேற்று கரூர் வந்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அதுல் குமார் தாகூர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சி.பி.ஐ. அலுவலகம் சென்ற சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அதுல் குமார் தாகூர் தலைமையிலான அதிகாரிகள் வழக்கு விசாரணையின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு கரூர் வந்துள்ள நிலையில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அதுல் குமாரின் ஆய்வு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


