Idhayam Matrimony

உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      தமிழகம்
Murmu 2023 04 18

புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஆனால் நமது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, காலணி வணிகத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளுடன் இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது. இது வணிகர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகளை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து