முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து 77 லட்சம் மோசடி

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூன்.15 - சேலத்தில் வீடு,கட்டும் கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.77 லட்சம் மோசடி செய்த 7 பேரை வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் கோட்டை பால் தெருவில் உள்ளது. சேலம் டாக்டர் அம்பேத்கார் கூட்டுறவு வீடு கட்டம் சங்கம். இதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சங்கத்தின் மேல் அதிகாரிகளுக்கு ஆய்வின் போது தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவு வீடு கட்டும் சங்க அதிகாரிகள் சேலம் வணிக குற்றப்புலனாய்வுத்துறை போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் துணை சூப்பிரண்டு சூரியகலா, இன்ஸ்பெக்டர்கள் சம்பத், விஜயகுமார்,வேணுகோபால்,ரவிச்சந்திரன், சுப்பிரமணி, அயூப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கூட்டுறவு சங்கத்தில் போலி உறுப்பினர்களை சேர்த்து அதன் மூலம் போலியாக ஆவணங்கள் தயாரித்து கடன் வழங்கி ரூ.77.04 லட்சம் மோசடி செய்திருப்பதும். இந்த மோசடி 2001-2006 ஆம் ஆண்டில் நடைப்பெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சங்கத்தின் முன்னாள் உதவி செயலாளர் சேலம் லைன்மேட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(43), சின்ன திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எஸ்.சுப்பிரமணியன்(45), தாதகாப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் விஜயகுமார்(54), சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சார்பதிவாளர் ரத்தினம்(49).புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் தனி அதிகாரி மகாலிங்கம்(60).ஓமலூரைச் சேர்ந்த முன்னாள் தனி அதிகாரி சுப்பிரமணி(61), முன்னாள் உதவி செயலாளரின் உறவினர் சேலம் லைன்மேட்டை சேர்ந்த சுந்தரம்(40) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்