முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சிங்கப்பூர், ஜூன். 17 - சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியி ல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங் க னையான சாய்னா நெக்வால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறினார். 

சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது. 

சூப்பர் சீரிசான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீராங்கனைகள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத்திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் தொடரில் இந்தியாவி ன் முன்னணி வீராங்கனையான சாய்னா நெக்வால் பங்கேற்று வருகிறார். அவர் முதல் சுற்றில் சீன வீராங்கனையை சந்தித்தார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த முதல் சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா 21 - 18, 13 - 21 , 21 - 16 என்ற செட் கணக்கில் போராடி சீன வீராங்கனை லான் லூவை தோற்கடித்தார். 

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான சாய்னா, உலக முன்னாள் சாம்பியனும், சீன வீராங்கனையுமான லான் லூவுடன் மோதினார். துவக்கத்தில் நன்கு ஆடி முதல் செட்டை கைப்பற்றினார் சாய்னா. 

சீன வீராங்கனை லான் லூ அடுத்த செட்டில் சுதாரித்து ஆடி தொடர்ந் து புள்ளிகள் பெற்று முன்னேறினார். இறுதியில் 21 - 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  

ஆட்டத்தைத் தீர்மானிக்கக் கூடிய 3 -வது செட்டில் சாய்னா துவக்கம் முதலே கவனத்துடன் ஆடினார். இதனால் அவர் தொடர்ந்து புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றார். இறுதியில் 21 - 16 என்ற கணக்கில் போ ராடி செட்டை கைப்பற்றினார். 

இந்த ஆட்டம் சுமார் 60 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் கடைசி செட்டையும், தனதாக்கி வெ ற்றி கண்டார் சாய்னா நெக்வால். 

அடுத்து நடக்க இருக்கும் 2 -வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்ச த்திர வீராங்கனையான சாய்னா நெக்வால், தைவான் நாட்டு வீராங் கனை சவோசியா செங்கை சந்திக்க இருக்கிறார். இதற்காக இரு வீரா ங்கனைகளும் ஆயத்தமாகி வருகின்றனர். 

இப்போட்டியின் மகளிருக்கான இரட்டையர் ஆட்டத்தில், இந்தியா வைச் சேர்ந்த அசுவினி, ஜூவாலா கட்டா ஜோடியும், கொரிய இணையும் பலப்பரிட்சை நடத்தின. 

இந்த ஆட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த இயுங் இன் ஜங் மற்றும் ஹா கிம் இணை அபாரமாக ஆடி, 21 - 17, 21 - 14 என்ற நேர் செட் கணக்கி ல் இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்