முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: இந்திய வீரர்களுக்கு எளிய தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூன். 19 - இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் டென்னிஸ் போட்டித் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் அருகே உள்ள விம்பிள்டனில் நாளை (20) துவங்குகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர். அவர்களுக்கு எளிய தொடக்கம் கிடைத்துள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். 

பெண்கள் பிரிவில், சானியா மிர்சா , பிரான்சின் விர்ஜினி ரோசனா வை எதிர்கொள்ள இருக்கிறார். விர்ஜினி சர்வதேச டென்னிஸ் தரவரி சையில் 98 -ம் இடம் வகிக்கிறார். சானியா மிர்சா 60 -வது இடத்தில் உள்ளார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய வீரர் சோம்தேவ் வர் மன் தரவரிசையில் 68-வது இடம் வகிக்கிறார். இவர் 110 -வது இடத்தி ல் உள்ள ஜெர்மனி வீரர் டென்னிஸ் கிரில் மேயரை சந்திக்க இருக்கிறார். 

முதல் சுற்றில் சானியா மிர்சா வெற்றி பெறும் பட்சத்தில் 2 -வது சுற்றி ல் உலகின் முதல் நிலை வீராங்கனையும், டென்மார்க் நாட்டின் டென் னிஸ் நட்சத்திரமுமான கரோலின் வோஸ்னியாக்கியை எதிர் கொள் வார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான சோம் தேவ் வர்மன் முதல் சுற்றை கடக்கும் பட்சத்தில், 2 -வது சுற்றில், அர்ஜென்டினா வீரர் ஜுயன் மொனா கோவை அல்லது ரஷ்ய வீரர் யோனி க்கு எதிராக ஆட வேண்டியிருக்கும். 

இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் ஜோடிகளான பயஸ் - பூபதி மற்றும் பொபண்ணா - குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோருக்கு முதல் சுற்று ஆட்டம் எளிதானது என்றே கூறலாம். 

மகளிருக்கான இரட்டையர் தொடக்க சுற்றும் எளிதாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரஷ்யாவின் எலீனா வோ ஸ்னியாக்கி ஜோடிக்கு முதல் சுற்று போட்டி சுலபமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

3 - வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்க முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சில நேரங்களில் எதிர்பாராத திருப்பங்களும் நிகழும். தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களு ம் வீராங்கனைகளும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்