முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மாணவர்களில் விளையாட்டு கோட்டாவுக்கான கவுன்சிலிங் ஜூன்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

30ம் தேதி நடக்கிறது. பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் 5 நாட்கள் நடக்கும். 

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களோடு, தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கும் சேர்த்து கவுன்சிலிங் நடத்தப்படும். ஒரு தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் தர மறுப்பதை தொடர்ந்து மற்ற தனியார் கல்லூரிகளும் தயக்கம் காட்டுகிறது. இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தனியார் கல்லூரிகளின் இடங்கள் பெறப்படும்.

திருவாரூர் மற்றும் தேனியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இது பெறப்படும்.

மருத்துவக்கல்விக்கான கட்டணம் குறித்து  ஆராய அடுத்த வாரம் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சேவையை அதிகரிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா கிரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்