முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்களாக சென்னையில் டீசல் கடும் தட்டுப்பாடு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 23 - சென்னையில் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  3 நாட்களாக பங்க்குகளில் டீசல் விற்கப்படாததால் பஸ், கார், லாரி ஓட்டுனர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று மத்திய அரசின் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றை வினியோகம் செய்கின்றன. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் டீலர்கள் அதிகம் உள்ளனர். மற்ற நிறுவனங்களுக்கு குறைந்த அளவில் எண்ணைய் தரம் பிரித்து வழங்குகின்றன.
கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பாரத் பெர்ட்ரோலியம் கார்ப்பரேஷன் டீலர்களின் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. டீசல் பயன்படுத்தக் கூடிய வாகனங்களான கார், வேன், லாரி, பஸ் போன்றவை டீசல் கிடைக்ககூடிய மற்ற பங்குகளுக்கு சென்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. டீசல் திடீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து பாரத் பெட்ரோலிய டீலர்கள் கூறியதாவது:
3 நாட்களாக டீசல் சப்ளை செய்யப்படவில்லை. வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். மும்பையிலிருந்து எண்ணை வரவில்லை என உயர் அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். ஆனாலும் நேற்று ஐ.ஓ.சி நிறுவினத்திடமிருந்து டீசல் பெறப்பட்டு வினியோகம் செய்வதாக கூறியுள்ளனர். டீசல் வந்தால் தான் எதையும் உறுதியாக கூற முடியும்.
இதனால் கார், லாரி, வேன், ஆம்னி பஸ் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து ஐ.ஓ.சி. தரப்பில் கூறப்படுவதாவது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வினியோகஸ்தர்கள் பங்க்குகளில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல டீசல் வினியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் நிலையில் பலரும் டீசல் வாகனங்கலுக்கு மாறுகிறார்கள். பெட்ரோல் கார் பயன்படுத்துபவர்கள் கூட டீசல் காருக்கு மாறுவதும் ஒரு காரணம். டீசல் தேவை பெருகி வருவதால் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்