முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பூஞ்ச்,ஜூன்.24 - ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைப்புற மாவட்டமான பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் இரண்டு லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். முன்னதாக இவர்களது இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் படை ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் வந்ததை அறிந்ததும் தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இயக்கம் பாகிஸ்தானை சேர்ந்ததாகும். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இவர்கள் யார் என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்