முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ஒரு திறமையற்ற பிரதமரா? மன்மோகன் மறுப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.30 - தாம் ஒரு திறமையற்ற பிரதமர் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதை மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்தார். பிரதமர் மன்மோகன் சிங் பலவீனமானவர் என்றும் திறமையற்றவர் என்றும் சோனியா காந்தி சொல்வதைத்தான் கேட்பார் என்றும் ஒரு மந்தமான பிரதமர் என்றும் மன்மோகன் சிங்கை பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். 

இந்தநிலையில் நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களிடையே நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தாம் ஒரு திறமையற்ற பிரதமர் என்றும் மந்தமான பிரதமர் என்றும் செயலற்றவர் என்றும் எதிர்க்கட்சிகள் புத்திக்கூர்மையுடன் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை ஒரு சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை நான் அடியோடு மறுக்கிறேன். தாம் காங்கிரஸ் கட்சியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதனால் காங்கிரஸ் கட்சியுடன் நான் கருத்துவேறுபாடு வைத்திருக்கக்கூடாது. காங்கிரஸ் சொல்வதை நான் செய்ய கடமைப்பட்டுள்ளேன். உண்மை வெல்லும். என்னுடைய சிறப்பான பணிகள் பேசும். எனக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியாகாந்தியும் அதிகப்பட்ச ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர். சோனியாவை நான் வாரம் ஒருமுறை சந்தித்து வருகிறேன். என்னுடைய பணிக்கு அவர் ஒரு தடையாக இருக்கிறார் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் மன்மோகன் சிங் கூறினார். 

மூத்த பத்திரிகை ஆசிரியர்களுடன் சுமார் 100 நிமிட நேரம் கலந்துரையாடல் செய்த மன்மோகன் சிங் எந்தவித சலனமும் இல்லாமல் சாதாரணமாக காணப்பட்டார். ராகுல் காந்தியை பிரதமராக்க சில காங்கிரஸ் தலைவர்கள் கோரி வருவது, லோக்பால் மசோதா விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மன்மோகன் சிங் விளக்கமாக பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்