முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பாநதி - ராமநதி - கடனா - அடவிநயினார் அணைகள் திறப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கடையநல்லூர், ஜூலை 2 - கார் நெல் சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் கருப்பாநதி,ராமநதி, கடனா, அடவிநயினார் அணைகளை நேற்று திறக்கப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சர் இசக்கிசுப்பையா, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கருப்பசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராசன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட கருப்பாநதி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கருப்பாநதி பாசன விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு கருப்பாநதி, ராமநதி, கடனா, அடவிநயினார் அணைகளிலிருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவுப்படி கருப்பாநதி, ராமநதி, கடனா, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் இருந்தும் நேற்று மதியம் 1 மணிக்கு தமிழக அமைச்சர்கள் இசக்கிசுப்பையா, சொ.கருப்பசாமி, கலெக்டர் நடராசன், செந்தூர்பாண்டியன் எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்துகொண்டு நீர்த்தேக்க மதகுகளை மலர் தூவி திறந்து வைத்தனர்.

கருப்பா நதியிலிருந்து விநாடிக்கு 220 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 11,660 ஏக்கர் நிலப்பரப்பிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் எனவும் அமைச்சர் இசக்கி சுப்பையா கூறினார். 

முன்னதாக அமைச்சர்களுக்கு கருப்பாநதி பாசன விவசாயிகள் சார்பாக சந்தனமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராசா, தொகுதி கழக செயலாளர் பொய்கை. சோ.மாரியப்பன், ஒன்றிய கழக செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி பெருமையா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ நயினாமுகம்மது, கம்பநேரி பஞ்சாயத்து தலைவர் மூக்கையா, காசிதர்மம் பஞ்சாயத்து தலைவர் ஆணைக்குட்டி பாண்டியன், இடைகால் பஞ்சாயத்து தலைவர் செல்லப்பா, முன்னாள் ஒன்றிய செயலாளர் குட்டிராசா, ஒன்றிய பேரவை செயலாளர் பெரியதுரை, நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், கருப்பையா, பழனி, ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, கண்ணா கூல்டிரிங்ஸ், முத்துக்கிருஷ்ணன், சொக்கம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சந்தணப்பாண்டி,கிளை செயலாளர் முரளிசுந்தரம், பிரதிநிதி சமயநல்லூர் முருகன், காசிதர்மம் வெள்ளத்துரை, பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ ,முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், அம்பை ஒன்றிய செயலாளர் தாயப்பராஜா, கடையம் பொன்னுத்துரை, ஜீவா, அம்பைதாசில்தார் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர்கள் சின்னச்சாமி, ஜஸ்டின், சட்டநாதன், பொறியாளர்கள் பாஸ்கர்ராஜ், சம்பத், ஞானசேகரன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன், பயிற்சி கலெக்டர் சங்கர்லால் குமாரத் ஆகியோர் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்