முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தானாம் இலங்கை அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஜூலை.- 5 - மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தான் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக விடுதலைப் புலிகள் கொடூரமாக செயல்பட்டதற்கான வீடியோ படங்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவத்தினர் கைது செய்யப்பட்ட போர் குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ படங்களை இங்கிலாந்தின் சேனல் 4 எனும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. இந்த படம் வெளியானதும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் இந்த வீடியோ ஆதாரங்களை மறுத்து வந்த இலங்கை அரசு, இப்போது விடுதலைப் புலிகள் மனித உரிமைகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபாய மதவெலா கூறும் போது, பி.பி.சி. ஒளிபரப்பிய படங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தினரை விடுதலை புலிகள் கொடூரமாக கொலை செய்த காட்சிகளை தனியார் நிறுவனம் வீடியோ படங்களாக எடுத்துள்ளது. இதை முற்றிலுமாக மாற்றி ராணுவ வீரர்கள் கொடூரமாக கொன்றுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனஅறார். முன்னதாக பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட வீடியோ பதிவுகள் போலியானவை என்றும், அது இலங்கையின் புகழை சீர்குலைப்பதற்காக ஒளிபரப்பானது என்றும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்