முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கிய வீராங்கனைகள் அஸ்வினி, சினிஜோஸ் நடவடிக்கை

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை. - 7 - ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய தடகள வீராங்கனைகள் அஸ்வி னி மற்றும் சினிஜோஸ் மீது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இது பற்றிய விபரம் வருமாறு - இந்திய தடகள வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டியாலாவில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஸ்டிராய்ட் என்னும் போதை மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்க ப்பட்டது. இந்த 3 பேரில் அஸ்வினி, சினி ஜோஸ், மன்தீப் கவுர் ஆகிய 3 வீராங் கனைகள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் காமன்வெல்த், ஆசி ய விளையாட்டுப் போட்டியில் 4, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங் கம் வென்று முத்திரை பதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலை மையில், விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு இந்திய தடகள அணிக்கு பயிற்சியாளராக இருந்த உக் ரைன் நாட்டைச் சேர்ந்த யூரி அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கிடையே ஊக்கமருந்தில் சிக்கிய அஸ்வினி, சினிஜோஸ் மீது இந்திய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இருவரும் இந்தியன் ரெயில்வேயில் பணிபுரிகிறார்கள்.
இது குறித்து ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய செயலாளர் திரிபாதி கூறியதாவது - ஏ சேம்பிள் சோதனையில் இருவரும் ஊக் க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. பி சேம்பிள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.
இது தொடர்பாக, அஸ்வினி, சினிஜோசிடம் விளக்கம் கேட்டு நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி சேம்பிள் சோதனையில் அவர்கள் ஊக் க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதும், நடவடிக்கை எடு க்கப்படும்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் விலக்கிக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அஸ்வினி, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பணிபுரிகிறார். சினிஜோஸ் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்