முக்கிய செய்திகள்

நல்ல நடிகை என்று பெயரெடுக்க வேண்டும் புதுமுகம் ஹாசினி பேட்டி

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை- .9 - கலை உலகுக்கு என்று எந்தவிதமான எல்லைகளும் வரையறுக்கப்படவில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் திறமை இருந்தால் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள்பட்டு விடுவார்கள். அப்படித்தான் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து கோடம்பாக்கத்தில் நான் நல்ல நடிகையாக பெயரெடுப்பேன் என்ற சபதத்துடன் இருக்கிறார் புதுமுகம் ஹாசினி. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ``அரும்பு மீசை குறும்பு பார்வை'' படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை பிரதிபலித்தார் என்று பலராலும் பாராட்டுப் பெற்ற ஹாசினியை சந்தித்தோம். எனது நிஜப்பெயர் மேகனா. இந்தப் பெயரில் நிறைய நடிகைகள் இருப்பதால் ஹாசினி என்று மாற்றிக்கொண்டேன். பெயர் மாறிய நேரமோ என்னமோ ``வேள்வி'' என்ற படத்தில் அறிமுகமானேன். அந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்ததைப் பார்த்து, ``அரும்பு மீசை குறும்பு பார்வை'' ``மேதை''  ``காதல் அல்ல அதையும் தாண்டி'' போன்ற படங்கள் வந்தது.

``அரும்பு மீசை குறும்பு பார்வை'' படம் எனக்கு நல்ல நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. டைரக்டர் வெற்றிவீரன், தயாரிப்பாளர் முத்துவேல் இருவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்து வரப்போகும் ``மேதை'' படத்தில் அஜய் என்ற புதுமுகம்தான் எனக்கு ஜோடி. படப்பிடிப்பின்போது ராமராஜன் சார் ரொம்பவும் சாதாரணமாக இயல்பாக பழகியது ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு புகழ்பெற்ற நடிகர் இவர் என்று ஆச்சர்யமாக இருந்தது.

இதைத்தவிர இன்னும் இரண்டு படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கு.

சின்ன வயதிலேயே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக புவணா மேடமிடம் நடனம் கற்றுக் கொண்டேன். பிறகே இங்கே அடியெடுத்து வைத்தேன். நல்ல கதை, அதில் எனக்கு பெயர் பெற்றுத்தரும் விதமான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். கிளாமர் கதாபாத்திரம் நடிக்கலாம். அதிலும் எல்லையை மிறி கிளாமர் செய்ய மாட்டேன். எந்த மொழியாக இருந்தாலும் அதில் திறமையை நிரூபித்து பெயர் வாங்கவேண்டும். என் ஆயுள் முழுக்க சினிமா தான் என்று முடிவெடுத்து விட்டேன்.

சுஹாசினி பெயரைப்போல் எனது பெயரும் ஒத்துப் போவதால் அவர் அளவுக்கு பேர் வாங்க முடியாது என்றாலும் அதில் பாதியாவது பேர் வாங்க ஆசை. தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தாலும் நடிப்பேன். நான் ப்ளஸ் டு வரை படித்து இருக்கிறேன். படிப்பில் ஆர்வமில்லை. நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்கிறார் ஹாசினி.

இதை ஷேர் செய்திடுங்கள்: