தமிழக அனல் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி: மத்திய அரசு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.- 11 - தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அளிக்கப்படும் என்று மத்திய நிலக்கரி துறை இணையமைச்சர் பிரகாஷ் பாட்டீல் பாபு உறுதியளித்தார். இது குறித்து தமிழக மின்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  சென்னையில் மத்திய அமைச்சருடன் பேச்சு நடத்தினார் மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இந்த பேச்சுவார்த்தையில் நெய்வேலி அனல் மின்நிலையத்தின் தலைவர் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மின்சார நிலவரம் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் அளவை முழுமையாக அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கோரிக்கையை கேட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் பாட்டீல் தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு எந்தளவுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவற்றை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தரமான நிலக்கரியை அளிப்பது தொடர்பாக நிலக்கரி நிறுவனத்துடன் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: