முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி தலைமையில் நேற்றுதலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் பால் கொள்முதலை அதிகரிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

பால்வளத்துறை ஆணையர்/ஆவின் நிர்வாக இயக்குநர் விபு நய்யர்,  முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் அமைச்சர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தமிழகத்தை பால் உற்பத்தியில் முன்னிலை மாநிலமாக திகழச்செய்ய ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.  

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணபட்டுவாடா குறித்த நேரத்தில் செய்யப்பட வேண்டும், நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் குறித்த நேரத்தில் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட நிதியிழப்பை சரிக்கட்டவும், பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு, அவர்களுக்கு நிலுவையில் உள்ள பால்பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏதுவாக முதலமைச்சர் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.49.65 கோடியை கருணையுடன் வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதமின்றி பால் பண பட்டுவாடா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அளிக்கப்பட வேண்டிய நிதி உதவித்தொகையான ரூபாய் 6.29 கோடியை  அமைச்சர் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியப் பொது மேலாளரிடம் வழங்கினார்.

பால் உற்பத்தியை விரைவாக பெருக்கும் வகையில் மாவட்ட பால் வளத்துறை துணை பதிவாளர்களுக்கு புதிய பால் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த தனித்தனியே மாவட்ட வாரியாக இலக்குகளை அமைச்சர்  வகுத்துக்கொடுத்ததுடன் ஒருமாத காலத்திற்குள் அவ்விலக்குகளை எய்தி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பால்பணத்தை பட்டுவாடா செய்யாமல் தாமதப்படுத்தும் சங்க அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை பால் ஆணையர் /ஆவின் இணை நிர்வாக இயக்குநர் (பொறுப்பு)  எம். ரவிகுமார், ஆவின் பொது மேலாளர் (பணிக்குழு) எஸ். முனிரத்தினம், மாவட்ட பால் உற்பத்தியாளகள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள், துணைபதிவாளர்கள் (பால்வளம்), பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்