முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு தொடர்: ஸ்காட்லாந்து அயர்லாந்து அணியை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

எடின்பர்க், ஜூலை. 14 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எடின்பர்க் நகரில் நடைபெற்ற 2 -வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர் லாந்து அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி தரப்பில், கொயிட்சர், டெ வே, பெரிங்டன், வாட்ஸ் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, டெவே மற்றும் மாம்சென் ஆகி யோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷரீப் மற்றும் ஹக் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர்.   

முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் எடின்பர்க் நகரில் கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 320 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் சதமும், 2 வீரர்கள் அரை சதமும் அடித்தனர். 

துவக்க வீரராக இறங்கிய ஸ்டிர்லிங் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவர் 95 பந்தில் 113 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடங்கும். இறுதியில் அவர் ஹக் வீசிய பந்தில் பெரிங்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, குசாக் 83 பந்தில் 71 ரன்னை எடுத்தார். இதில் 6 பவு ண்டரி அடக்கம். தவிர, பாயின்டர் 34 பந்தில் 51 ரன்னை எடுத்தார். கேப்டன் போர்ட்டர் பீல்டு 21 ரன்னையும், கீப்பர் வில்சன் 22 ரன்னையும் எடுத்தனர். 

ஸ்காட்லாந்து அணி தரப்பில், மாம்சென் 26 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். டெவே 41 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, ஷரீப் மற்றும் ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து அணி 321 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை அயர்லாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்னை எடுத்தது. 

இதனால் ஸ்காட்லாந்து அணி இந்த 2 -வது லீக் ஆட்டத்தில் 9 பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

ஸ்காட்லாந்து அணி சார்பில் துவக்க வீரர் கொயிட்சர் அதிகபட்சமாக, 85 பந்தில் 89 ரன்னை எடுத்தார். டெவே 58 பந்தில் 50 ரன்னை எடுத்தா ர். பெரிங்டன் 23 பந்தில் 56 ரன்னை எடுத்தார். தவிர, வாட்ஸ் 60 பந்தி ல் 54 ரன்னையும், மெக்லாட் 41 பந்தில் 29 ரன்னையும் எடுத்தனர். 

அயர்லாந்து அணி தரபப்பில், டாக்ரெல் 58 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். ரேன்கின் 74 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, மூனே 1 விக்கெட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்