முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி: டிராவிட்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 21 - இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மை தானத்தில் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்தி ய அணியின் முன்னாள் கேப்படனான ராகுல் டிராவிட் தெரிவித்தார். இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்கிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும், 20 -20 போட்டி ஒன்றும் நடைபெற உள்ளன. 

முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள புகழ் பெற்ற லார்ட் ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியை லார்ட்ஸ்  மைதானத்தில் இந்திய வீரர்கள் எடுத்து வருகின்றனர். 

உலக தரவரிசையில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்திலு ம், இங்கிலாந்து 3 -வது இடத்திலும் உள்ளன. எனவே லண்டனில் இன் று நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சமமான பலத் துடன் மோத உள்ளன. 

இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிரா விட் பயிற்சி முடித்த பின் லண்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியி ல் இந்தத் தொடர் குறித்து கூறியதாவது - 

லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் பிறப்பிடம் ஆகும். 1996 -ம் ஆண்டு இதே மைதானத்தில் நான் விளையாடி 90 ரன் எடுத்துள்ளேன். இந்த இடத்திற்கு வந்தால் சொந்த வீட்டில் இருப்பது போல உணருகிறேன். 

கிரிக்கெட் விளையாடாவிட்டால் கூட இங்கு வந்தால் நிம்மதியாக இருப்போம். நமது இந்திய அணியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் விளையாட வருவேன் என்று நினைக்கவில்லை. 

இந்தப் போட்டியை பொறுத்தவரையில், இந்திய பேட்ஸ்மேன்களுக் கும், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கும் இடையே நடக்கும் மோத லாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத டெண்டுல்கர்,காம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஜாஹிர்கான் ஆகி யோர் இடம் பெற்று உள்ளனர். 

எனவே இந்திய அணியின் பேட்டிங் இந்தத் தொடரில் சிறப்பாக இருக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தொடரின் போது, டிராவி ட், லக்ஷ்மண் மற்றும் ரெய்னா ஆகியோர் நன்கு ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்