முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாப சுவாமி கோயிலை அரசு ஏற்கும் திட்டம் இல்லை கேரள முதல்வர் அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.- 30 - பத்மநாபசுவாமி கோயிலை அரசு ஏற்கும் திட்டம் ஏதுமில்லை. அதுகுறித்து யோசனை கோரிக்கையை ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  பத்மநாபசுவாமி கோயிலையும், அதன் சொத்துக்களையும் அரசே ஏற்க வேண்டும். புதிதாக ஒரு அமைப்பு உருவாக்கியோ, அறக்கட்டளை மூலமோ அல்லது குருவாயூர் தேவஸ்தானத்தின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட அதிகார குழு மூலமாகவோ கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இது தொடர்பாக மாநில அரசின் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது உம்மன் சாண்டி இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறுகையில், கோயில் நகைகள் அனைத்தும் பக்தர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டவை. அவை கோயிலுக்கே சொந்தம். அவற்றுக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்கும் என்றார். இதற்கிடையே கோயிலை மாநில அரசு ஏற்க வேண்டும் என்ற கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து திருவாங்கூர் அரச குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது வரும் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்