முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் பாக். அணிக்கு மிஸ்பா கேப்டன்

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

கராச்சி, ஜூலை. - 30  - ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்ய இருக்கு ம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மூத்த வீரரான மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது பற்றிய விபரம் வரு மாறு -  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் 28 -ம் தேதி முதல் செப் டம்பர் மாதம் 18 -ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செ ய்து ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டி - 20 போட்டிகளில் விளையாடுகிறது.  இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெஸ்ட் , ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 நிலைக்கும் கே ப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முன்பு டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக இருந்தார். தற் போது ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிக்கு கூடுதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப் பயணத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் அணியில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரமீஸ் ராஜா, சுழற் பந்து வீரர் யாசிம் ஷா, வேகப் பந்து வீரர் அஜாஸ் சீமா ஆகிய 3 புதுமுகங்கள் அணியில் இடம் பெற்று உள்ளனர்.
சீனியர் வீரர்களான உமர் குல், வகாப் ரியாஸ், அப்துர் ரகுமான் ஆகி யோருக்கு ஓய்வு கொடுக்குப்பட்டுள்ளது. மே.இ.தீவுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத சோகைல் தன்வீர், அதான் அக்மல், இம்ரான் பர்கத் ஆகியோருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜிம்பாப்வே தொடருக்கான பாகிஸ்தான் அணி வருமாறு -
மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), முகமது ஹபீஸ், தவ்பீக் உமர், இம்ரான் பர்கத், அசார் அலி, யூனுஸ்கான், ஆசாத் சபீஸ், உமர் அக்மல், ரமீஸ் ராஜா, அதான் அக்மல், அஜ்மல் , யாசீர் ஷா, சோகைல் தன்வீர், சோகைல் கான், அஜாஸ் சீமா மற்றும் ஜூனைத்கான் ஆகியோர்.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரான அப்ரிடி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி ஆகியவற்றுக்கு கேப்டனாக இருந்தார். டெ ஸ்ட் போட்டிக்கு மிஸ்பா கேப்டனாக இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அப்ரிடிக்கும் ஏற்பட்ட மோ  தல் காரணமாக அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதனால் மிஸ் பா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்