முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

பழனி,ஆக.6  - பழனி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் செயற்கை முறையிலான கருத்தரித்தல் சிகிச்சையில் சரஸ்வதி என்ற 60 வயது பெண்ணுக்கு இரண்டேகால் கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. பழனி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாடி சரஸ்வதி, லிங்கேஸ்வரன் தம்பதியர் கடந்த ஓராண்டிற்கு முன்பு குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்தனர். சரஸ்வதிக்கு மாதவிடாய் நின்று 10 ஆண்டுகளாகி விட்டன. 

இருந்த போதிலும் பாலாஜி மருத்துவமனையின் உதவியின் பேரில் செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சைக்கு சரஸ்வதி உட்படுத்தப்பட்டார். அவருக்கு மிக கவனமாக சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலனாக கடந்த 28.7.2011 அன்று இரண்டேகால் கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சரஸ்வதிக்கு பிறந்தது. இந்த நிகழ்வு பழனி பாலாஜி கருத்தரித்தல் மையத்தின் குழந்தையின்மை சிகிச்சையின் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம் ஆயிரக்கணக்கான தம்பதியினர் பயனடைந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் கூட தம்பதியினர் இங்கு சிகிச்சைக்காக வந்து பயனடைந்துள்ளனர். 

இது குறித்து இம்மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தாமரை செல்வி கூறும் போது, அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு நமது மாறி வரும் வாழ்க்கை முறையே காரணமாகிறது. சுற்றுச்சூழல் மாசு, அழுத்தம் நிறைந்த வேக வாழ்க்கை, தவறான உணவு பழக்கம், புகை மற்றும் போதை பழக்கம், பெண்ணின் திருமண வயது 32 க்கும் மேலாவது உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்படுகிறது. மேற்கண்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் முழுமையான சிகிச்சை முறைகளும் தீர்வும் நவீன மருத்துவ வளர்ச்சியில் உண்டு என்பதை உணர வேண்டும். காலத்தோடு தங்கள் குறைகளை கண்டறிந்து தகுந்த சிகிச்சை முறைகளை கையாண்டால் குழந்தையில்லை என்ற நிலை இல்லாமல் போகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்