முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. துணைச் செயலர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பூர், ஆக. 8 - நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக திருப்பூர் மாநகர தி.மு.க. துணைச் செயலாளர் டி.கே.டி.எம்.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மங்கலம் அருகே வெள்ளஞ்செட்டி பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமியின் மனைவி சுப்பாத்தாள் (60) இவருக்கு அப்பகுதியில் 56 சென்ட் நிலம் உள்ளது. அதில் சுமார் 5 சென்ட் நிலத்தை அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், ரங்கசாமி, ராஜேந்திரன் மற்றும் ஒரு ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து குறைந்த விலைக்கு அபகரிக்க திட்டமிட்டனராம். தொடர்ந்து கடந்த 2007 ம் ஆண்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்ததுடன் நிலத்தைச் சுற்றி கம்பி வேலியும் போட்டுள்ளனர். இதுகுறித்து சுப்பாத்தாளின் மகன் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் மேற்கூறிய 4 பேர் மீது மங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கூறி திருப்பூர் மாநகர தி.மு.க. துணைச் செயலர் டி.கே.டி.எம்.நாகராஜ் தலைமையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பாலாஜியை மிரட்டினராம். எனினும் பாலாஜி வழக்கை வாபஸ் பெறாததால் அவரை அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டைகளை கொண்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் ஈஸ்வரன், ரெங்கசாமி, ராஜேந்திரன் மற்றொரு ஈஸ்வரன் மற்றும் டி.கே.டி.எம்.நாகராஜ் ஆகியோர் மீது மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நாகராஜை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே கைது செய்தனர். நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்