முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மேலும் ஒரு விமானம்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.4 - லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மேலும் ஒரு விமானப்படை விமானம் அனுப்பி வைக்கப்படுகிறது. லிபியாவில அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு கலவரம் மூண்டுள்ளது. இதனால் லிபியாவில் தங்கி தொழில் செய்து வரும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகிறார்கள். லிபியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை அழைத்து வர மும்பையில் இருந்து கப்பல்களும், டெல்லியில் இருந்து விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

எகிப்து அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் இருந்து ஆயிரத்து 185 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இந்திய கப்பல் புறப்பட்டது. லிபியாவின் பல்வேறு இடங்களில் இந்தியர்கள் அவர்களை தலைநகர் திரிபோலிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை எகிப்து நாட்டின் வழியே இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விமானப் படை விமானம் அனுப்பப்பட உள்ளது. மற்ற நாட்டினர் அனைவரும் திரும்பி விட்ட நிலையில் இந்தியர்கள் மட்டுமே லிபியாவில் இருப்பதால் அவர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானங்களும், விமானப் படை விமானங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்