முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் போட்டி இந்தியா - ஜப்பான் அணிகள் மோதல் பயஸ், மகேஷ், சோம்தேவ் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 20  - ஜப்பானில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டேவிஸ் கோப்பை டென் னிஸ் போட்டியின் உலகக் குரூப் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜப் பான் அணிகள் மோத இருக்கின்றன. இதில் கலந்து கொள்ள 4 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலகக் குரூப் தகுதிச் சுற் று ஆட்டம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் அடுத்த மாதம் 16 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க இருக்கிறது.
இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோத இருக்கின்றன. இதி ல் பங்கேற்க 4 பேர் கொண்ட அணியை அகில இந்திய டென்னிஸ் சங் கம் நேற்று அறிவித்தது. அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேர்வுக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு அனில் தாபுர் தலைமை தாங்கினார். தவி ர, ரோகித் ராஜ்பால் மற்றும் பல்ராம் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, மேற்கண்ட 4 வீரர்கள் தேர்வு பெற்றனர்.
இந்திய அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ் வர்மன் மற்றும் ரோகன் பொபண்ணா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி இருவ ரும் பங்கேற்கின்றனர்.
இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே மொத்தம் 5 ஆட்ட ம் நடக்க இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக (விளையாடாத) எஸ். பி. மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கரன் ரஸ்டோகி மற் றும் விஷ்ணு வர்த்தன் இருவரும் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்ப ட்டு உள்ளனர்.
கடந்த மார்ச் மாத துவக்கத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணியும், செர்பி ய அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் செர்பியா 4 - 1 என்ற கணக்கி ல் வெற்றி பெற்றது.
இந்திய அணி விபரம் - சோம்தேவ் தேவ் வர்மன், ரோகன் பொபண்ணா, லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர்.
மாற்று வீரர்கள் - கரன் ரஸ்டோகி, விஷ்ணு வர்த்தன்.
கேப்டன் (விளையாடாத) - எஸ். பி. மிஸ்ரா.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்