முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி லியாண்டர், பொபண்ணா ஜோடி வெற்றி

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், செப். - 1  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவி ன் முதல் சுற்றில் லியாண்டர் - மகேஷ் ஜோடி, மற்றும் பொபண்ணா - குரேஷி ஜோடி ஆகியவை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி ன. சானியா மிர்சா ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போ து விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இதற்காக  அவர்கள் தீவிர பயிற்சியுடன் வந்து உள்ளனர்.  ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடியும், உக் ரேன் மற்றும் ஸ்பெயின் இணையும் மோதின.  இந்தப் போட்டியில் பயஸ் மற்றும் மகேஷ் ஜோடி அபாரமாக ஆடி, 7 - 6 (8), 6 - 4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் டொல்கொபொ லோவ் மற்றும் ஆல்பர்ட் ரமோஸ் இணையை வீழ்த்தி 2 -வது சுற்றுக் கு தகுதி பெற்றது. மற்றொரு முதல் சுற்றில் புளோரியன் மேயர் (ஜெர்மனி) - ரோஜியர் வாசன் (ஹாலந்து) ஜோடியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேயல் மான்பில்ஸ் மற்றும் மார்க் சிக்யுல் இணையும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் ஜோடியுடன் பயஸ் மற்றும் பூபதி இணை மோதும்.
இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் அய்சம் அல் ஹக் குரே ஷி ஜோடியும், அமெரிக்காவைச் சேர்ந்த இணையும் மோதின. இதில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி 5 -ம் நிலை ஜோடியாகும்.
3 செட் கொண்ட இந்த ஆட்டத்தின் முடிவில், இந்திய - பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ஜோடி 6 - 1, 2 - 6, 6 - 2 என்ற செட் கணக்கில் ராபி கினேபி ரி மற்றும் ரைனே வில்லியம்ஸ் இணையை தோற்கடித்தது.
மற்றொரு முதல் சுற்றில், அமெரிக்காவைச் சேர்ந்த டிராவிஸ் பேரட் மற்றும்  பாபி ரெனால்ட்ஸ் ஜோடியும், ஜேம்ஸ் செரிடானி (அமெரிக் கா) மற்றும் பிலிப் மார்க்ஸ் (ஜெர்மனி) இணையும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் இணையுடன் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி அடுத்த சுற்றில் மோதும்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா, இஸ் ரேல் வீராங்கனை சாகர் பீருடன் மோதினார். இதில் சானியா 6 - 7 (5), 6 - 3, 6 - 1 என்ற செட் கணக்கில் முன்னாள் பார்ட்னரிடம் தோல் வி அடைந்தார். ஒற்றையர் பிரிவில் சானியாவின் தோல்விப் படலம் தொடர்கிறது.
ஆடவருக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான டிஜோகோவிக்கும், அயர் லாந்து வீரர் நிலாண்டும் மோதினர். இந்த ஆட்டம் சுமார் 50 நிமிடத் தில் முடிந்தது.
இதில் செர்பிய வீரர் டிஜோகோவிக் சிறப்பாக ஆடி, 6 - 0, 5 - 1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது நிலாண்டு காயத்தால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் டிஜோகோவிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலகின் 2 -ம் நிலை வீரரான ரபேல் நடால் கஜகஸ்தான் வீரர் குலுபொவுடன் மோதினார். இதில் ஸ்பெயின் வீரர் நடால் 6- 4, 7-6, 7 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்குள் நுழைந்தார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் - 1 வீராங்கனை வோஸ்னியாக்கியும் ஸ்பெயின் வீராங்கனை லகோஸ்டிராவும் மோ தினர். இதில் டென்மார்க் வீராங்கனை 6- 3, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்