ரயில்வே மேம்பாலம் - முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - ரூ.24 கோடியில் ரயில்வே மேம்பாலம், ரூ.4 கோடியில் மகப்பேறு மையம் ரூ.1.42 கோடியில் ரூ.1.42 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் சென்னை கோட்டையில் நேற்று தமிழக முதல்வர் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து விபரம் வருமாறு:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (7.9.2011) தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகராட்சியும், இரயில்வே துறையும் இணைந்து 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரங்கராஜபுரம் இரயில்வே மேம்பாலத்தினையும்,  சென்னை மாநகராட்சி சார்பில் 8.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியும், இரயில்வே துறையும் இணைந்து 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரங்கராஜபுரம் இரயில்வே மேம்பாலத்தினை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்ததன் மூலம் கோடம்பாக்கம் பகுதியிலிருந்து தியாகராயநகர் பகுதிக்கு போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல இந்த புதிய பாலம் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை மாநகராட்சி சார்பில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர அவசர கால மகப்பேறு கவனிப்பு மையத்தையும், 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அபுசாலி தெரு, பாஸ்கர் காலனி,  இளையா தெரு, பட்டேல் நகர் 4வது தெரு, லாசரஸ் சர்ச் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய nullங்காக்களையும், 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு, எம்.ஆர். நகர், பென்ஷனர்ஸ் 4வது சந்து, பி.பி. அம்மன் கோவில் (கிழக்கு) சந்து, சமயபுரத்தம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், எம்.ஆர். நகரில் nullப்பந்து மைதானம் மற்றும் கிரீம்ஸ் சாலையில் மட்டை பந்து வலைப் பயிற்சி மைதானம் ஆகியவற்வையும், 80 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விஜயநகர் 5வது தெருவில் பெட்டக வடிவ பாலம், ரெட்டி தெரு சிவன் கோயில் வடக்கு மாட வீதி சந்திப்பில் வார்டு அலுவலகக் கட்டடம், காயிதே மில்லத் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் உணவு உட்கொள்ளும் அறை, பார்த்தசாரதி நகரில் வணிக வளாகம் ஆகிய கட்டடங்களையும், 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காரணீஸ்வரர் பகோடா தெரு சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் பங்காரு தெரு சென்னை நடுநிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கங்கள் மற்றும் காயிதே மில்லத் சாலை சென்னை நடுநிலைப் பள்ளி மற்றும் காந்தி சாலையில் கலையரங்கங்களையும், 39 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஜெ.ஜெ. ஏ தெரு, கே.எம். கார்டன் முதல் தெரு மற்றும் ஆர்.ஆர்.நகர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடங்களையும்,  21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிகேசவலு தெரு, மந்தைவெளித் தெரு, அருணாசலம் தெரு மற்றும் சமயபுரத்தம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடங்கள் என மொத்தம் 8 கோடியே 36 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 வளர்ச்சிப் பணிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீnullர் வழங்கல் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: