தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் வந்தார்கள்... போனார்கள்...

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த திங்களன்று சபைக்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் சிறிது நேரம் இருந்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் பதிலுரை வழங்கும்போது கூறிய கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். நீண்டநேர வாக்குவாதத்திற்கு பிறகு அனைத்து தி.மு.க. உறுப்பினரும் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று சபை துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன் தலைமையில் சபைக்கு வந்து அமர்ந்தனர். சரியாக காலை 10 மணிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தனது இருக்கைக்கு வந்ததும், அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு திருக்குறள் வாசித்தார். அதுவரை சபையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் திருக்குறள் படித்து முடித்ததும், கருத்து ஏதும் கூறாமல் ஒட்டுமொத்தமாக வெளியேறினர். முதலில் துரைமுருகன் வெளியேற, அவரைத்தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் சபையைவிட்டு வெளியே சென்றனர்.

அப்போது உறுப்பினர்களில் சிலர் கூறும்போது, திருக்குறள் வாசிக்கும் விஷயம் தான் அவையில் நன்றாக இருக்கிறது. எனவே, அதற்கு வந்தோம். இப்போது போகிறோம் என்று கூறிக்கொண்டே சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: