முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனுக்கு நற்சான்றிதழ் தரவில்லை

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.10 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்றோ, அவர் குற்றமற்றவர் என்றோ இதுவரை நாங்கள் எந்த நற்சான்றிதழும் தரவில்லை என்று மத்திய புலனாய்வு கழகம் ஐகோர்ட்டில் தெரிவித்தது. சி.பி.ஐ. தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வேணுகோபால் இவ்வாறு தெரிவித்தார். மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்குமாறு தொழிலதிபர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றுதான் கூறியிருந்தோம். தொழிலதிபர் சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடனும், அவருடைய சகோதரர் கலாநிதி மாறனுடனும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருந்தது என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த முறை இந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணை நடவடிக்கையை செய்தி ஊடகங்கள் வெளியிட்ட விதத்தால் தயாநிதி மாறனுக்கு நாங்கள் நற்சான்று அளித்ததை போல் தோற்றம் ஏற்பட்டு விட்டது. விசாரணை அறிக்கையை கடந்த 2 ம் தேதி நாங்கள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது அதை அரைகுறையாகவும், அவசர கோலத்திலும் செய்தியாக தந்ததின் விளைவுதான் இது. 

இதை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நேர்மை குறைவாக நடக்கிறது என்று பொதுநல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தற்போது மனுதாக்கல் செய்திருப்பது ஆட்சேபத்திற்குரியது. சி.பி.ஐ. தொடர்ந்துள்ள இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திலேயே விழுந்து விடும் என்று அமைப்பின் சார்பில் வாதிடும் பிரசாந்த் பூஷன் கூறுவதும் கடுமையாக ஆட்சேபத்துக்கு உரியது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். இந்த நிலையில் எங்களுடைய நேர்மையை சந்தேகித்து விமர்சிப்பது முறையல்ல என்றார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். நீங்கள் கோருகிறபடி அந்த வார்த்தையை நீக்குவதற்கு பூஷன் என்ன கூறுகின்றனர் என்று கேட்பது அவசியம் என்று இரு நீதிபதிகளும் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்